காலத்தால் அழியாத மிகச் சிறந்த பழைய பாடல்களின் தொகுப்பு இந்த என்றும் இனிமை நிகழ்ச்சி.  பல்வேறு பண்டிகை நாட்களிலும், விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் புதிய படங்களிலிருந்து இடம்பெறும் பாடல்களை நாம் ரசிக்க இயலும்.  ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும், சுவை குன்றாத இத்தகைய பாடல்களை ஒரு தொகுப்பாக வழங்கும் நிகழ்ச்சி இது. 

ஒரு குறிப்பிட்ட நடிகர் இடம்பெற்ற பாடல்கள், நடிகை இடம்பெற்ற பாடல்கள், குறிப்பிட்ட இயக்குநரால் படைக்கப்பட்ட பாடல்கள், ஒரு பொது கருத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் என சூழ்நிலைக்கேற்ப பாடல்களின் தொகுப்புகள், சிறந்த இணைப்புரையுடன், அழகிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் வாயிலாக படைக்கப்பட்டு நேயர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைவது என்றும் இனிமை.

========

A Compilation of old and new songs is generally done to suit the occasion like festivals, anniversaries and where such situation does not arise songs are selected in a similar wavelength which will keep the audience engrossed.

 ஞாயிறுதோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை இடம்பெறும் நேயர்களுக்கு விளையாட்டு விருந்து படைக்கும் நிகழ்ச்சி இது.

பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்தின் மிகப் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று பி.எஸ்.என்.எல்.ஸ்போர்ட்ஸ் குவிஸ்.

நேயர்கள் தொலைபேசி மூலம் பங்கேற்கும் நேரலை நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியை பிரபல மருத்துவர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுமந்த் சி.ராமன் திறம்பட நடத்துகிறார்.

தொலைபேசி மூலமாக மட்டுமன்றி குறுந்தகவல், மின்னஞ்சல், காணொலி கைப்பேசி மூலமாகவும் நேயர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.  இது ஒரு கூடுதல் வாய்ப்பாக அமைகின்றது. 

நேரடிக் கேள்விகள், வண்ணப்படங்கள், சதுரங்கப் புதிர்கள், காணொலிக் காட்சிகள் என பல்வேறு விதமான சுவாரசியமான கேள்விகள் இந்நிகழ்ச்சியில் கேட்கப்படுகின்றன.  தொழில்நுட்ப அம்சங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு துடிப்பான நிகழ்ச்சி இது.

2002-ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, தொடர்ச்சியாக பலமுறை நேரலையாக இடம்பெற்ற நிகழ்ச்சி என்ற அடிப்படையில் லிம்கா புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சியாக இடம்பெற்ற பி.எஸ்.என்.எல்.ஸ்போர்ட்ஸ் குவிஸ், தற்போது 678 பாகங்களைக் கடந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

 =============

The SPORTS QUIZ is one of the best and most successful programmes of Doordarshan, Chennai.Edited on 2nd June.

This is a LIVE PHONE-IN QUIZ programme conducted by a very lively, knowledgeable and chirpy quiz master Dr. Sumanth C. Raman. Innumerable viewers respond to sports related artistic questions through LIVE Phone lines.

This programme has featured in THE LIMCA BOOK OF RECORDS for the longest running LIVE TV SHOW and has crossed 677 episodes till date.

The popularity of this programme is such that it has been continuously sponsored by BSNL network.

Frequency : Every Sunday 9 P.M.

Duration : One hour

திங்கள் பிற்பகல் 12.05 மணி முதல் 1 மணி வரை - மருத்துவம்

நாட்டு மக்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் விதமாக, அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நேயர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வளிக்க வழி செய்யப்படுகிறது. 

தொலைக்காட்சி அரங்கத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற ஒரு ஒருங்கிணைப்பாளர் தொகுத்து வழங்க, விருந்தினராக இடம்பெறும் மருத்துவ வல்லுநர், மக்கள் அன்றாட வாழ்வில்  சந்திக்கும் நோய்கள், மனித உடற்கூற்றின் செயல்பாடு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் தொற்று நோய் போன்றவற்றைப் பற்றி தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஹலோ உங்களுடன் நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது.

சமுதாயத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்த நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிவார்ந்த வினாக்களை எழுப்புகின்றனர். வல்லுநர்களின் தெளிவான விளக்கங்கள் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக அமைகின்றன.  நேயர்கள் நோயற்ற வாழ்வைப் பெறுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

நோய்கள் பற்றிய எச்சரிக்கை மட்டுமன்றி, நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் பற்றிய விளக்கமும் வழங்கப்படுகிறது.  பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்தையும் நேயர்களையும் இணைக்கும் பாலமாக இந்நிகழ்ச்சி விளங்குகிறது.

Live: Every Monday 12.05 Pm - 1.00 pm

To promote the awareness among the public, this programme is designed to invite the eminent health experts from Government Hospitals and faculty members with widespread resources and experiences who are to interact with the audiences over phone far away from the reach of the experts.

At the outset, it is a studio based live programme with an anchor and the expert well prepared for the live show, a topic which is related to a disease or human anatomy or even a currently health problems facing far and wide will be discussed and the doctor in particular topic will find a solution to it and give advice to the audience.

The heterogeneous audiences are viewing this programme with much interest that throng upon to ask questions over phone. The expert’s neat and lucid answers make them satisfactory. The aim of the programme, thus, concerns the audiences a gay and healthy life.

It is structured to know certain health hazards but to follow certain rules of life in tranquility. It creates a bridge between the audience and our Kendra with a cordial relationship and credibility of our programme as well.

கல்லூரிக் காலங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

புகழ்பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி டாக்டர் வி.இறையன்பு இந்த நிகழ்ச்சியைத் திறம்பட தொகுத்து வழங்குகிறார்.

இளைஞர்களின் மென்திறன், கற்பனைத்திறன், தன்னம்பிக்கை, நேரப் பயன்பாடு, பொது அறிவு, நாட்டு நடப்பு, மொழித்திறன், கணித அறிவு, நல்லொழுக்கம், நினைவாற்றல், கவன ஆற்றல், விட்டுக்கொடுக்கும் தன்மை, சுய மேம்பாடு போன்ற நல்ல ஆற்றல்களை வளர்க்கும் விதமாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் டாக்டர் இறையன்பு இ.ஆ.ப., சிறந்த 38 நூல்களை எழுதியுள்ளார், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டு கூட்டங்களில் பேசியுள்ளார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இவரது பணியை அடிப்படையாகக் கொண்டு சுமார் 20 மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.  இவர்களில் ஐவர் ஏற்கனவே முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

Frequency : 5 days a week

Day & Time of Telecast : Mon - Friday 10.30 P.M.

Duration : 30 mts

Format : Motivational talk for the youth &  college students

Presenter : Dr. V. Iraianbu I.A.S.

Content :  The programme aims at improving the soft skills, creativity, self confidence, time management, general knowledge, current affairs, language skills, numerical ability, good habits, memory power and span of attention, sportsmanship, self improvement etc for the benefit of college students. This programme is mounted as a part of educational telecast.

The presenter Dr.V. Iraianbu I.A.S. has authored 38 looks, won several awards, addressed more than 2000 gatherings, participated in more than 1000 radio and TV programmes

Nearly 20 students have done research programmes on his work. Five candidates have been already awarded Ph.D.

 In-plant Training for Engineering students

https://ddpodhigai.org.in/index.php/information/2015-05-26-07-05-05/engineering-training.html

 ஞாயிறுதோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை இடம்பெறும் நேயர்களுக்கு விளையாட்டு விருந்து படைக்கும் நிகழ்ச்சி இது.

பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்தின் மிகப் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று பி.எஸ்.என்.எல்.ஸ்போர்ட்ஸ் குவிஸ்.

நேயர்கள் தொலைபேசி மூலம் பங்கேற்கும் நேரலை நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியை பிரபல மருத்துவர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுமந்த் சி.ராமன் திறம்பட நடத்துகிறார்.

தொலைபேசி மூலமாக மட்டுமன்றி குறுந்தகவல், மின்னஞ்சல், காணொலி கைப்பேசி மூலமாகவும் நேயர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.  இது ஒரு கூடுதல் வாய்ப்பாக அமைகின்றது. 

நேரடிக் கேள்விகள், வண்ணப்படங்கள், சதுரங்கப் புதிர்கள், காணொலிக் காட்சிகள் என பல்வேறு விதமான சுவாரசியமான கேள்விகள் இந்நிகழ்ச்சியில் கேட்கப்படுகின்றன.  தொழில்நுட்ப அம்சங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு துடிப்பான நிகழ்ச்சி இது.

2002-ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, தொடர்ச்சியாக பலமுறை நேரலையாக இடம்பெற்ற நிகழ்ச்சி என்ற அடிப்படையில் லிம்கா புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சியாக இடம்பெற்ற பி.எஸ்.என்.எல்.ஸ்போர்ட்ஸ் குவிஸ், தற்போது 678 பாகங்களைக் கடந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

 =============

The SPORTS QUIZ is one of the best and most successful programmes of Doordarshan, Chennai.Edited on 2nd June.

This is a LIVE PHONE-IN QUIZ programme conducted by a very lively, knowledgeable and chirpy quiz master Dr. Sumanth C. Raman. Innumerable viewers respond to sports related artistic questions through LIVE Phone lines.

This programme has featured in THE LIMCA BOOK OF RECORDS for the longest running LIVE TV SHOW and has crossed 677 episodes till date.

The popularity of this programme is such that it has been continuously sponsored by BSNL network.

Frequency : Every Sunday 9 P.M.

Duration : One hour

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 

HITS: free website counter

Other Group Sites

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 563

Feedback