ஓர் அறிவிப்பு
பொதிகை தொலைக்காட்சியில் காலை நேரங்களில் 15 நிமிட கால அளவிற்கு ஒளிபரப்பாகும் வண்ணம், விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
சுற்றுலாத்தலங்கள், இந்திய உணவு வகைகள் , யோகா உள்ளிட்ட பயிற்சிக்கலைகள், சிறப்பு மிக்க பல்வேறு வகையான கல்விக்கூடங்கள் இன்னும் இது போன்ற கருத்துக்களில் இந்த நிகழ்ச்சி அமையப்பெறலாம்
இதற்கான விண்ணப்பப் படிவங்களை, சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தின் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
அணுக வேண்டிய முகவரி
இயக்குநர்
விளம்பரதாரர் நிகழ்ச்சிப் பிரிவு
'பொதிகை' தொலைக்காட்சி நிலையம்
சுவாமி சிவானந்த சாலை
சென்னை - 600 005.
மேலும் விவரங்களை www.ddpodhigai.org.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.
மாதிரி வடிவ நிகழ்ச்சியுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 9 ஆம் தேதி (09.12.2016) மாலை 4.00 மணி வரை நீடிக்கப் பட்டுள்ளது.