Hello Ungaludan

திங்கள் பிற்பகல் 12.05 மணி முதல் 1 மணி வரை - மருத்துவம்

நாட்டு மக்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் விதமாக, அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நேயர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வளிக்க வழி செய்யப்படுகிறது. 

தொலைக்காட்சி அரங்கத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற ஒரு ஒருங்கிணைப்பாளர் தொகுத்து வழங்க, விருந்தினராக இடம்பெறும் மருத்துவ வல்லுநர், மக்கள் அன்றாட வாழ்வில்  சந்திக்கும் நோய்கள், மனித உடற்கூற்றின் செயல்பாடு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் தொற்று நோய் போன்றவற்றைப் பற்றி தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஹலோ உங்களுடன் நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது.

சமுதாயத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்த நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிவார்ந்த வினாக்களை எழுப்புகின்றனர். வல்லுநர்களின் தெளிவான விளக்கங்கள் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக அமைகின்றன.  நேயர்கள் நோயற்ற வாழ்வைப் பெறுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

நோய்கள் பற்றிய எச்சரிக்கை மட்டுமன்றி, நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் பற்றிய விளக்கமும் வழங்கப்படுகிறது.  பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்தையும் நேயர்களையும் இணைக்கும் பாலமாக இந்நிகழ்ச்சி விளங்குகிறது.

 

ஹலோ உங்களுடன்

செவ்வாய் பிற்பகல் 12.05 மணி முதல் 1 மணி வரை -

ஹலோ உங்களுடன்

புதன் பிற்பகல் 12.05 மணி முதல் 1 மணி வரை -

ஹலோ உங்களுடன்

வியாழன் பிற்பகல் 12.05 மணி முதல் 1 மணி வரை -

வெள்ளி பிற்பகல் 12.05 மணி முதல் 1 மணி வரை - நட்சத்திர உலா

இந்த நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு நேயர்களுடன் உரையாடுகின்றனர். 

நேயர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளிக்கும் சுவையான பதில்களும், நினைவுகூரும் அனுபவங்களும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டுகின்றன.

இந்த நிகழ்ச்சியை பெருமளவில் நேயர்கள் ரசித்துப் பார்க்கின்றனர். நிகழ்ச்சிக்கு உயிரூட்டும் விதமாக அன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும் பிரபலங்கள் பங்கேற்ற படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பாகின்றன.

தங்கள் உள்ளம் கவர்ந்த திரை நட்சத்திரத்துடன் நேரடியாக தொலைபேசியில் உரையாடவும், அவர்களை சின்னத்திரையில் கண்டு களிக்கவும் நேயர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைகின்றது.

 

===========

 

"Hello Ungaludan" (Health)

Live: Every Monday 12.05 Pm - 1.00 pm

To promote the awareness among the public, this programme is designed to invite the eminent health experts from Government Hospitals and faculty members with widespread resources and experiences who are to interact with the audiences over phone far away from the reach of the experts.

At the outset, it is a studio based live programme with an anchor and the expert well prepared for the live show, a topic which is related to a disease or human anatomy or even a currently health problems facing far and wide will be discussed and the doctor in particular topic will find a solution to it and give advice to the audience.

The heterogeneous audiences are viewing this programme with much interest that throng upon to ask questions over phone. The expert’s neat and lucid answers make them satisfactory. The aim of the programme, thus, concerns the audiences a gay and healthy life.

It is structured to know certain health hazards but to follow certain rules of life in tranquility. It creates a bridge between the audience and our Kendra with a cordial relationship and credibility of our programme as well.

Rate this item
(164 votes)

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 553

Feedback